Friday, April 29, 2011

இன்னும் என்னவெல்லாம் முடியுமோ
அத்தனை கொடுமைகளையும்
செய்து முடியுங்கள்---ஆனால்..
.
உங்கள் அராஜகம் என்னை
அச்சுறுத்திவிடாது .

நான் ஒரு போதும் சோர்ந்து விழப்போவதில்லை

என் இறுகி மூடிய கைகளுக்குள்
ஒரு விதை ...ஒரு சின்னஞ்சிறு உயிர் வித்து

அதை நான் பத்திரமாகக் காத்து வைத்துள்ளேன் .

அதை எம் மண்ணில் மீண்டும் விதைப்பேன்

அதுவே என் நம்பிக்கை 

No comments:

Post a Comment