நாடு ஒரு வேதனையான தருணத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருக்கும் செயலானது மென்மேலும் சிறு வியாபாரத்தைச் சீரழிக்கும். வேலை வாய்ப்பை இழந்து தெருவுக்கு வரும் மக்களுக்கு உணவளிக்கவோ, மாற்று வேலைகளை ஏற்படுத்திடவோ அரசிடம் திட்டங்கள் இல்லை. மாறாக விலையேற்றமும், கட்டண உயர்வுகளுமே நிதர்சனமாகி வருகின்றன. தமிழன், தெலுங்கன், சீக்கியன் என்றில்லாமல், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி மேலும் அதிகரிக்கிறது. பசியால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கையும், ஒரு கவளச் சோற்றுக்காக அலைந்திடும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
இந்தியா என்ற தேசம் மிக அண்மைக் காலத்தில் உருவானது. சாதி, மத, மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் இருந்த போதும் “இந்தியன்” என்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரே காரணி இருக்குமானால் அது நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை பெற்றவர்கள் என்பதுதான். இன்று அதே ஏகாதிபத்தியம், உலகப் பெரும் நிதி மூலதனமாக மாறி பங்குச்சந்தைகளின் வடிவில் நம்மை ஆக்கிரமிக்க வருகிறது. பட்டுத்துணியிடம் ஏற்பட்ட வியாபாரப் போட்டியால் கட்டை விரல்கள் வெட்டுப்பட்ட இந்திய நெசவாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவுரிக்காகவும், இன்ன பிற செல்வங்களுக்காகவும் நிர்மூலமாக்கப்பட்ட நமது மண் சிவந்து கிடக்கிறது. அதே வரலாற்றை மீண்டும் அனுமதிக்கப் போகிறோமா? ... வரலாற்றுச் சக்கரம் பின் நோக்கிச் சுழலுமா?